Ad Code

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : IES உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 032 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.04.2019.

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : IES உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 032 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.04.2019. இணைய முகவரி : https://upsc.gov.in/
ஐ.இ.எஸ்., ஐ.எஸ்.எஸ். பணியிடங்களுக்கான தேர்வு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யூ.பி.எஸ்.சி., பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் உயர் அதிகாரி பதவிகளான, இந்தியன் எக்கனாமிக் சர்வீஸ் (ஐ.இ.எஸ்.) மற்றும் இந்தியன் ஸ்டாடிஸ்டிக்கல் சர்வீஸ் (ஐ.எஸ்.எஸ்.) போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை அறிவித்துள்ளது. இந்த தேர்வு மூலம் 65 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் ஐ.இ.எஸ். பணிக்கு 32 இடங்களும், ஐ.எஸ்.எஸ். பணிக்கு 33 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 1-8-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். பொருளாதாரம், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிசினஸ் எக்காமிக்ஸ், எக்னாமெட்ரிக்ஸ் போன்ற முதுநிலை படிப்புகளை படித்தவர்கள் ஐ.இ.எஸ். தேர்வுக்கும், புள்ளியியல், கணிதவியல், கணிதப் புள்ளியியல், அப்ளைடு ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போன்ற படிப்புகளை படித்தவர்கள். ஐ.எஸ்.எஸ். பணிக்கும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசிநாள் ஏப்ரல் 16-ந் தேதியாகும். அப்ளிகேசன்களை ரத்து செய்ய விரும்பினால் ஏப்ரல் 23 முதல் 30-ந் தேதிக்குள்ளாக திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான தேர்வு ஜூன் 28-ந் தேதி நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code