உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, April 14, 2019

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 785 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019. இணைய முகவரி : www.ongcindia.com

ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 785 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.04.2019. இணைய முகவரி : www.ongcindia.com
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 785 வேலைவாய்ப்புகள் என்ஜினீயர்கள் விண்ணப்பிக்கலாம் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் 785 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. என்ஜினீயர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் சுருக்கமாக ஓ.என்.ஜி.சி. (ONGC) என அழைக்கப்படுகிறது. மகாரத்னா அந்தஸ்து பெற்ற மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்த நிறுவனத்தில் ‘கேட் -2019’ தேர்வு அடிப்படையில் ஏராளமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏ.இ.இ., கெமிஸ்ட், ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 785 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பணிப்பிரிவு வாரியாக காலியிட விவரம் : ஏ.இ.இ. 550, கெமிஸ்ட் - 67, ஜியாலஜிஸ்ட் - 68, ஜியோபிசிக்ஸ்ட் - 43, மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் ஆபீசர் - 33, புரோகிராமிங் ஆபீசர் - 13, டிரான்ஸ்போர்ட் ஆபீசர் - 11 இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு ஏ.இ.இ. பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி என்ஜினீயரிங் பட்டப் படிப்புகள், முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்கள் ஏ.இ.இ. பணிக்கு விண்ணப்பிக்கலாம். முதுநிலை வேதியியல், ஜியாலஜி மற்றும் அவை தொடர்பான முதுநிலை படிப்புகள், பி.இ. படித்தவர்களுக்கு இதர பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. கட்டணம் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றம் மாற்றுத்திறனாளிகள் தவிர்த்த மற்றவர்கள் ரூ.370 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஏப்ரல் 25-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்த பணிக்கான நேர்காணல் 10-6-2019-ந் தேதி நடைபெறுகிறது. கேட் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் https://www.ongcindia.com/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

No comments:

Post a Comment