உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, March 31, 2019

JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 70 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2019.

JIPMER RECRUITMENT 2019 | JIPMER அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பேராசிரியர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 70 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.05.2019. இணைய முகவரி : www.job.kalvisolai.com
ஜவகர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் சுருக்கமாக ‘ஜிப்மர்’ (JIPMER) என்று அழைக்கப்படுகிறது. புதுச்சேரியில் செயல்படும் இந்த கல்வி-ஆராய்ச்சி மையத்தில் தற்போது பேராசிரியர். உதவி பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு 70 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனட்டாமி, அனஸ்திசியாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மெடிசின், இ.என்.டி., டென்டிஸ்ட்ரி, ஆப்தமாலஜி, ஆர்த்தோபெடிக்ஸ், பீடியாட்ரிக்ஸ், பேத்தாலஜி, பார்மகாலஜி, சைகியாலஜி, சைகியாட்ரி, பல்மோனரி மெடிசின், ரேடியோ டயக்னாசிஸ், சர்ஜரி உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளன. இவை தவிர கற்பித்தல் சாராத லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை மருத்துபடிப்புகள் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள், பேராசிரியர், உதவி பேராசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். 12-ம் வகுப்பு படித்தவர்கள் லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு விண்ணப்பிக்கலாம். லோயர் டிவிசன் கிளார்க் பணி விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். உதவி பேராசிரியர் பணிக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்களும், பேராசிரியர் பணிக்கு 58 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் மே 1-ந் தேதியாகும்.

No comments:

Post a Comment