உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, September 22, 2019

தமிழகத்தில் 176 குடிமையியல் சிவில் நீதிபதி பணிகள். கடைசி நாள் 9-10-2019

தமிழகத்தில் 176 குடிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது. தற்போது இந்த அமைப்பு, தமிழக நீதித்துறையில் ‘சிவில் ஜட்ஜ்’ (குடிமையியல் நீதிபதி) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. தகுதியுள்ள சட்ட பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

புதிதாக சட்டப்படிப்பு முடித்த 22 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வக்கீலாக பணிபுரிபவர்கள், அரசு உதவி வழக்கறிஞராக இருப்பவர்கள் 25 முதல் 40 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்க முடியும். 1-7-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர் எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். அவர்கள் பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். வக்கீல் அல்லது பிளீடரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருபவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அல்லது அரசு உதவி வக்கீலாக 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணி அறிவிப்புக்கு முந்தைய 3 ஆண்டுகளுக்குள் சட்டம் படித்த புதியவர்கள், பார்கவுன்சிலில் பதிவு செய்து வைத்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்களே. இவர்கள் குறிப்பிட்ட சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.150 விண்ணப்ப பதிவு கட்டணமாகவும், ரூ.500 தேர்வுக் கட்டணமாகவும் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு இந்த கட்டண தொகையில் விலக்கு வழங்கப்படுகிறது. ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த தேர்வு முதல் நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. 24-11-2019, அன்று முதல்நிலைத் தேர்வும், வரும் 2020 மார்ச் 28,29-ந் தேதிகளில் முதன்மைத் தேர்வும் நடைபெற உள்ளது. குறிப்பிட்ட உடல்தகுதியும் பரிசோதிக்கப்படுகிறது. அதே வேளையில் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 9-10-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 11-10-2019-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment