உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, September 22, 2019

விமான நிறுவனத்தில் வேலை.

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிடெட் (AIESL). தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் சூப்பிரவைசர் (உதவி மேற்பார்வையாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களான இதற்கு மொத்தம் 170 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 33 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினர் 36 வயதுடையோரும், எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் 38 வயதுடையோரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

கணினி சார்ந்த டிப்ளமோ படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், ஓ.பி.சி. பிரிவினர் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 28-ந் தேதிக்குள் ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான தேர்வு/திறமைத் தேர்வு வருகிற அக்டோபர் 20-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பிக்கவும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://aiesl.airindia.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.No comments:

Post a Comment