எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு 7 ஆயிரத்து 942 இடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
எல்.ஐ.சி. நிறுவனம் புகழ்பெற்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாகும். தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட் (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 7 ஆயிரத்து 942 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மண்டலம் வாரியான பணியிடங்கள் விவரம்: தெற்கு மண்டலம் - 400, வடக்கு மண்டலம் 1544, வடக்கு மத்திய மண்டலம் 1313, கிழக்கு மத்திய மண்டலம் 1497, கிழக்கு மண்டலம் 980, மத்திய மண்டலம் 472, தெற்கு மத்திய மண்டலம் 632, மேற்கு மண்டலம் 1104.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-9-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களும், 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர் களுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.510 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.85 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 1-ந்தேதியாகும். இதற்கான முதல் நிலைத் தேர்வு அக்டோபர் 21,22-ந் தேதிகளில் நடைபெறுகிறது. முதன்மைத் தேர்வு பற்றிய விவரங்கள் பின்னர் வெளியாகும்.
இது பற்றிய விரிவான விவரங்களை www.licindia.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:
Post a Comment