துணை ராணுவத்தில் கான்ஸ்டபிள் பணிக்கு 914 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை சுருக்கமாக சி.ஐ.எஸ்.எப். (CISF) என அழைக்கப்படுகிறது. துணை ராணுவ படைகளில் ஒன்றான இது மத்திய அரசு நிறுவனங்களுக்கு தேவையான பாதுகாப்பு பணிகளை கவனிக்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 914 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
சமையல்காரர், முடிதிருத்துபவர், சலவைக்காரர், தச்சர், பெயிண்டர், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக சமையல்காரர் பணிக்கு 350 பேரும், முடிதிருத்துனர் பணிக்கு 109 பேரும், சலவைக்காரர் பணிக்கு 133 பேரும், சுகாதார தொழிலாளர் பணிக்கு 270 பேரும் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது 2-8-1996 மற்றும் 1-8-2001 ஆகிய இரு தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டி யதில்லை.
தேர்வு செய்யும் முறை
சான்றிதழ் சரிபார்த்தல், உடல்அளவுத்தேர்வு, உடல்திறன் தேர்வு, பணித்திறன் சோதனை, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் வருகிற அக்டோபர் 22-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.cisfrectt.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

No comments:
Post a Comment