Wednesday, September 18, 2019

வேளாண் ஆராய்ச்சியாளர் வேலை


  • வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியம் சுருக்கமாக ஏ.எஸ்.ஆர்.பி. என அழைக்கப்படுகிறது. 
  • தற்போது இந்த அமைப்பு ரிசர்ச்மேனேஜ்மென்ட் பணிக்காக 72 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 
  • இது 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளாகும். 
  • இவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள ஆராய்ச்சி மையங்களில் இயக்குனர், உதவி இயக்குனர், துணை இயக்குனர் தரத்திலான பல்வேறு பிரிவு பணிகளில் நியமிக்கப்படுவார்கள். 
  • வேளாண் அறிவியல் மற்றும் உணவு, தாவரவியல், உயிரியல், சுற்றுச்சூழல் சார்ந்த முதுநிலை அறிவியல் படிப்புகள், முனைவர் ஆராய்ச்சிப்பட்டம் பெற்றவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. 
  • குறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். விண்ணப்பதாரர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 
  • அந்தந்த பணிக்கான கல்வித் தகுதி, அனுபவ விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். 
  • விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 26-ந் தேதியாகும். ரூ.1500 கட்டணமாக செலுத்த வேண்டும். 
  • எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 
  • இது பற்றிய விவரங்களை http://asrb.org.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts