இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தளங்களில் ஒன்று கேரள மாநிலம் கொச்சியில் செயல் படுகிறது.
தற்போது இந்த கப்பல் தளத்தில் கப்பல் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மொத்தம் 89 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த வினாக்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20-9-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
செப்டம்பர் 20-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
இதே நிறுவனத்தில் உதவி பொறியாளர், கணக்காளர், உதவி நிர்வாக அலுவலர் போன்ற அலுவலக பணிகளுக்கு 57 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மெக்கானிக்கல், கெமிக்கல் பிரிவில் டிப்ளமோ என்ஜினீயர்கள் உதவி பொறியாளர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஐ.டி.ஐ. படித்து குறிப்பிட்ட அனுபவம் பெற்றவர்களும் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
எம்.காம், சி.ஏ., சி.எம்.ஏ. மற்றும் இதர பட்டப்படிப்புகள் படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன.
விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இது பற்றிய விவரங்கள் https://www.cochinshipyard.com என்ற இணைய பக்கத்தில் உள்ளது.
0 Comments