- AIR INDIA RECRUITMENT 2019 | AIR INDIA அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : ஏர்கிராப்ட் டெக்னீசியன் உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 355 .
- நேர்காணல் நடைபெற உள்ள நாள் : ஆகஸ்டு 26 முதல் செப்டம்பர் 24-ந் தேதி வரை .
- இணைய முகவரி : http://aiesl.airindia.in/
விமான நிறுவனத்தில் 355 வேலைவாய்ப்புகள் விமான பொறியியல் நிறுவனத்தில் 355 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் ‘ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீசஸ் லிமிெடட் (AIESL)’ என அழைக்கப்படுகிறது. விமான பொறியியல் நிறுவனமான இதில் தற்போது ‘ஏர் கிராப்ட் டெக்னீசியன், ஸ்கில்டு டிரேட்ஸ்மேன்’ போன்ற பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. இது குறிப்பிட்ட காலத்திற்கான பணிவாய்ப்பாகும். விண்ணப்பதாரர்கள் 1-8-2019-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன், ரேடியோ, இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற என்ஜினீயரிங் பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர்கள் ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிட்டர், ஷீட் மெட்டல் ஒர்க்கர், செவ்விங் டெக்னாலஜி, வெல்டர், மெஷினிஸ்ட், கார்பெண்டர், பைபர் கிளாஸ், கார்பெண்டர், எலக்ட்ரோபிளேட்டிங், டிராப்ட்ஸ்மேன், பிளான்ட் எலக்ட்ரிக்கல் போன்ற பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி., பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு ஒரு சில பணிகள் உள்ளன. இந்த பணியிடங்கள் நேர்காணல் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நாளில் நேர்காணல் நடக்கிறது. வரும் ஆகஸ்டு 26 முதல் செப்டம்பர் 24-ந் தேதி வரை நேர்காணல் நடக்க இருக்கிறது. எந்தெந்த நாளில் எந்த பணிக்கு நேர்காணல் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு நேரில் செல்லவும். அப்போது தேவையான ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://aiesl.airindia.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment