- தமிழக சுகாதார துறையில் மருந்தாளுனர் பணியிடங்களுக்கு 405 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- தமிழக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் ‘ஆயுஸ் கிளினிக்’குகளில் பார்மஸி படித்தவர்களை ‘டிஸ்பென்சர்’ பணியில் நியமிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 405 பேர் தேர்வு செய்யப்படு கிறார்கள். இவை பகுதி நேர பணியிடங்களாகும்.
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர் களாகவும் 57 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
- சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவ பிரிவுகளில் பார்மஸி டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் 20 சதவீதமாகவும், மேல்நிலை படிப்பு மதிப்பெண்கள் 30 சதவீதமாகவும், பார்மஸி படிப்பு மதிப்பெண்கள் 50 சதவீதத்திற்கும் கணக்கிடப்பட்டு மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்.
- இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது.
- விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள் இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106” என்ற முகவரியை வருகிற செப்டம்பர் 20-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும், விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் www.tnhealth.org என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
தமிழக சுகாதார துறையில் 405 மருந்தாளுனர் பணி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment