- மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்று இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (எச்.சி.எல்.). செம்புத்தாது நிறுவனமான இதில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. பிட்டர், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன், டிராட்ஸ்மேன், மெக்கானிக், பம்ப் ஆபரேட்டர், மெக்கானிக், வயர்மேன், ஸ்டெனோகிராபர், லேப் அசிஸ்டன்ட், கார்பென்டர், சர்வேயர் போன்ற பிரிவில் பயிற்சிப் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- டிப்ளமோ என்ஜினீயர்கள், பி.இ. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
- விண்ணபதாரர்கள் 14 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- செப்டம்பர் 19-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை www.hindustancopper.com/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
மத்திய நிறுவனத்தில் பயிற்சிப்பணி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment