- ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு 477 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- இது பற்றிய விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி தரத்திலான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 477 பேர் தேர்வு செய்யப்படுகிறாா்கள். இதில் அதிகபட்சமாக டெவலப்பர் பிரிவில் 181 இடங்களும், சிஸ்டம் அட்மின், கிளவுட் அட்மின், நெட்ஒர்க் என்ஜினீயர், டெஸ்டர், ஐ.டி. செக்யூரிட்டி எக்ஸ்பர்ட் உள்ளிட்ட கணினி தொழில்நுட்பம் சார்ந்த பணிகளுக்கு 100க்கு மேற்பட்ட இடங்கள் உள்ளன.
- சீப்மேனேஜர், மேனேஜர் தரத்திலான பணிகளுக்கும் கணிசமான காலியிடங்கள் உள்ளன.
- ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
- வயது வரம்பு ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பெரும்பாலான பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது. மேலாளர், முதுநிலை மேலாளர் போன்ற பணிகளில் 40 வயதுடையவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது.
- வயது வரம்பு 30-6-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
- கல்வித்தகுதி கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., சி.இ.சி., எம்.சி.ஏ., எம்.எஸ்சி (ஐ.டி.), எம்.எஸ்சி. (கம்ப்யூட்டர் சயின்ஸ்) போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
- குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.750 கட்டணம் செலுத்தி, இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.125 செலுத்தினால் போதுமானது.
- இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 25-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
- இதற்கான ஆன்லைன் தேர்வு அக்டோபர் 24-ந் தேதி நடைபெறுகிறது. தேர்வுக்கான அனுமதி அட்டை (ஹால்டிக்கெட்) அக்டோபர் 10-ந் தேதிக்குப் பின்னர் பதிவிறக்கம் செய்யலாம்.
- விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
ஸ்டேட் வங்கியில் 477 சிறப்பு அதிகாரி பணி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment