- இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் கீழ் செயல்படுகிறது இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் (ஐ.எஸ்.எம்.). சுரங்கங்களைப் பற்றிய கல்வி மற்றும் ஆய்வு நிறுவனமான இது ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் செயல்படுகிறது.
- இந்த கல்வி நிறுவனம் 1926-ல் தோற்றுவிக்கப்பட்டு 4 ஆண்டு சுரங்க தொழில்நுட்ப பட்டப்படிப்புகள், முதுநிலை படிப்புகள், 5 ஆண்டுகள் கொண்ட இன்டகரேட்டடு படிப்புகள், இரட்டை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.
- ஆய்வு படிப்புகளையும் மேற்கொள்ளலாம். தற்போது இந்த கல்வி - ஆராய்ச்சி மையத்தில் டெபுடி ரிஜிஸ்திரார், அசிஸ்டன்ட் ரிஜிஸ்திரார், இளநிலை உதவியாளர் மற்றும் ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 191 பணியிடங்கள் உள்ளன. இதில் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கு 106 இடங்களும், ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கு 74 இடங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டம், மேனேஜ்மென்ட், சி.ஏ. சி.எஸ்., ஐ.சி.டபுள்யு.ஏ. படித்தவர்கள் டெபுடி ரிஜிஸ்திரார் பணிக்கும், மேனேஜ்மென்ட், நிதி சார்ந்த முதுநிலை படிப்புகளை படித்து குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் உதவி ரிஜிஸ்திரார் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
- ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பும், தட்டச்சுத்திறனும் பெற்றவர்கள் ஜூனியர் அசிஸ்டன்ட் பணிக்கும், குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள்,
- ஐ.டி.ஐ. படிப்புடன் 5 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்கள் ஜூனியர் டெக்னீசியன் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
- ஜூனியர் அசிஸ்டன்ட், ஜூனியர் டெக்னீசியன் பணியிடங்களில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது.
- அதிகாரி பணியிடங்களுக்கு 50 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு சேர்க்கப்படு கிறார்கள்.
- விருப்பமுள்ளவா்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
- விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் 4-11-2019-ந் தேதியாகும்.
- இது பற்றிய விரிவான விவரங்களை www.iitism.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Home »
@ LATEST NOTIFICATION
,
IIT JOB
» இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் டெபுடி ரிஜிஸ்திரார், அசிஸ்டன்ட் ரிஜிஸ்திரார், இளநிலை உதவியாளர் மற்றும் ஜூனியர் டெக்னீசியன் பணி
இந்திய தொழில்நுட்ப கல்வி மையத்தில் டெபுடி ரிஜிஸ்திரார், அசிஸ்டன்ட் ரிஜிஸ்திரார், இளநிலை உதவியாளர் மற்றும் ஜூனியர் டெக்னீசியன் பணி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment