- BSF RECRUITMENT 2020 | BSF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.03.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
எல்லைப் பாதுகாப்புப் படை சுருக்கமாக பி.எஸ்.எப். (BSF) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த படைப்பிரிவின் புதுடெல்லி தலைமை பொது இயக்குனரகத்தில் இருந்து ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள், மெக்கானிக், ஏ.சி.டெக்னீசியன், பிளம்பர் உள்ளிட்ட குரூப்-பி, குரூப்-சி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 317 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக ஹெட்கான்ஸ்டபிள் (மாஸ்டர்) பணிக்கு 56 இடங்களும், ஹெட்கான்ஸ்டபிள் (என்ஜின் டிரைவர்) பணிக்கு 68 இடங்களும் உள்ளன. கான்ஸ்டபிள் தரத்திலான குரூவ் பணிக்கு 160 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான பணிகளுக்கு 22 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு 20 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ என்ஜினீயரிங் அல்லது பட்டதாரி என்ஜினீயரிங் படித்தவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் ஒர்க்சாப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) படித்தவர்கள் ஹெட்கான்ஸ்டபிள் மற்றும், கான்ஸ்டபிள் தரத்திலான பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பணிசார்ந்த பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்
சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான பணி களுக்கு ரூ.200-ம், இதர பணிகளுக்கு ரூ.100-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் மார்ச் 16-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடைய வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றுகள், கட்டண டி.டி. ஆகியவை இணைக்க வேண்டும்.
விண்ணப்பத்தை பதிவிறக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.bsf.nic.in, www.bsf.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment