Ad Code

IBPS RECRUITMENT 2019 | IBPS அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.

  • IBPS RECRUITMENT 2019 | IBPS  அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : புரபெசனரி அதிகாரி உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 4336 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 28-8-2019.
  • தேர்வு நடைபெற உள்ள நாள் : 30-11-2019 .
  • இணைய முகவரி : www.ibps.in
வங்கி அதிகாரி பணிகளுக்கான எழுத்து தேர்வு. 4336 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.பொதுத் துறை வங்கிகளில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை ஐ.பீ.பி.எஸ். அமைப்பு அறிவித்து உள்ளது. இந்த தேர்வின் மூலம் 4336 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

‘இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐ.பீ. பி.எஸ்.)’ அமைப்பு வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்குகிறது. கிளார்க், புரபெசனரி அதிகாரி, ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கு இந்த அமைப்பு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி தேர்ச்சி பெறுபவர் களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குகிறது.தற்போது ஐ.பீ.பி.எஸ். அமைப்பு புரபெசனரி அதிகாரி மற்றும் மேனேஜ்மென்ட் டிரெயினி பணிகளுக்கான 9-வது பொது எழுத்து தேர்வு ( CRP- PO/MT-IX) அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 14 பொதுத்துறை வங்கிகளின் புரபெசனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.மொத்தம் 4 ஆயிரத்து 336 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் பொதுப் பிரிவுக்கு 2031 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 904 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 670 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 299 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 432 இடங்களும் உள்ளன. வங்கிகள் வாரியான முழுமையான பணியிட விவரம் மற்றும் அந்தந்த வங்கிகளில் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

இனி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரங்களை பார்க்கலாம்...

வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1-8-2019 தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2-8-1989-ந் தேதிக்கு முன்னரும், 1-8-1999-ந் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதி களின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:
முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம்.

கட்டணம்:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வழியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையொப்பம் அப்லோடு செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

முக்கியத் தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 28-8-2019
முதல்நிலை தேர்வு நடைபெறும் நாட்கள் : அக்டோபர் 12, 13, 19, 20 -ந் தேதிகள்
முதன்மை தேர்வு நடைபெறும் நாள் : 30-11-2019
பொது நேர்காணல் நடைபெறும் நாள் : ஜனவரி 2020
மேலும் விரிவான விவரங்களை www.ibps.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code