உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Monday, August 5, 2019

NIFT RECRUITMENT 2019 | NIFT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவி பேராசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 179 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.09.2019. இணைய முகவரி : www.nift.ac.in

  • NIFT RECRUITMENT 2019 | NIFT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவி பேராசிரியர்   உள்ளிட்ட பணி .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 179 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.09.2019.
  • இணைய முகவரி : www.nift.ac.in
தேசிய பேஷன் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சுருக்கமாக ‘நிப்ட்’ (NIFT) எனப்படுகிறது. புதுடெல்லியில் உள்ள நிப்ட் கல்வி மையத்தில் இருந்து உதவி பேராசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 179 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொது பிரிவினருக்கு 74 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 26 இடங்களும், எஸ்.டி.பிரிவினருக்கு 13 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 49 இடங்களும் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 17 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

முதுநிலை படிப்புகளை குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் அல்லது முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத் திறனாளிகள் பெண் விண்ணப்பதாரர்கள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. செப்டம்பர் 6-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.nift.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment