SHIPYARD RECRUITMENT 2019 |
SHIPYARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : பேப்ரிகேசன் அசிஸ்டன்ட்|
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 195 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 13.02.2019.
கப்பல் தளத்தில் 195 வேலைவாய்ப்புகள்
கொச்சி கப்பல் தளத்தில் 195 வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல் தளங்களில் ஒன்று கேரள மாநிலம் கொச்சியில் செயல்படுகிறது. கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் எனப்படும் இந்த நிறுவனத்தில் தற்போது பேப்ரிகேசன் அசிஸ்டன்ட், அவுட்பிட் அசிஸ்டன்ட், ஏர்கண்டிசனர் டெக்னீசியன், ஸ்கப்போல்டர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளன. மொத்தம் 195 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள்.
இதில் அதிகபட்சமாக வெல்டர் பணிக்கு 47 பேரும், பிட்டர் பணிக்கு 23 பேரும், பைப் பிட்டர் பணிக்கு 25 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஷீட் மெட்டல் ஒர்க்கர், டீசல் மெக்கானிக், மோட்டார் வெகிகிள் மெக்கானிக், மெஷினிஸ்ட், ஷிப்ரைட், ஸ்கப்போல்டர், சேப்டி அசிஸ்டன்ட் போன்ற பிரிவிலும் பணிகள் உள்ளன.
மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 13-2-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க வேண்டியதில்லை. இணையதள விண்ணப்பம் பிப்ரவரி 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.cochinshipyard.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments