IOCL RECRUITMENT 2019 |
IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : பயிற்சிப் பணி|
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 420 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 420 பயிற்சிப் பணிகள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் பயிற்சிப் பணிகளுக்கு 420 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். (I.O.C.L.) என அழைக்கப்படுகிறது. உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் இடம் பெறும் இந்தியாவின் முன்னணி நிறு வனங்களில் ஒன்று இது. தற்போது இந்த நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு வி்ண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 420 பேர் இந்த பயிற்சிப் பணியில் சேர்க்கப்படுகிறார்கள். இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 241 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 106 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 63 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 10 இடங்களும் உள்ளன. மாநில வாரியான இடங்கள், பணிப்பிரிவு மற்றும் இடஒதுக்கீடு அடைப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பயிற்சிப் பணியில் சேர விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31-12-2018-ந் தேதியில் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்ககளாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
பிட்டர், எலக்ட்ரிசீயன், எலக்ட்ரானிக் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், எலக்ட்ரிக்கல் அண்ட், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் 2 ஆண்டு ஐ.டி.ஐ படித்தவர்கள், 3 ஆண்டு டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு இந்த பயிற்சிப் பணிகளில் வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதலில் www.apprenticeship.gov.in என்ற இணைய தளத்தில் பெற்று விண்ணப்பதாரர் தங்கள் பெயரை பதிவு செய்துவிட்டு, பின்னர் www.iocl.com என்ற இணைய தளம் சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசிநாள் வருகிற பிப்ரவரி 10-ந் தேதியாகும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள ஐ.ஓ.சி.எல். இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
Home »
IOC JOB
» IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சிப் பணி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 420 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.
IOCL RECRUITMENT 2019 | IOCL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பயிற்சிப் பணி| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 420 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10.02.2019.
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment