- பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் சிந்த் வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- மொத்தம் 168 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சட்ட மேலாளர், பயர்சேப்டி ஆபீசர், செக்யூரிட்டி ஆபீசர், அக்ரி பீல்டு ஆபீசர், சாட்டர்டு அக்கவுண்டன்ட், சாப்ட்வேர் டெவலப்பர், ஐ.டி. புரோகிராமர், டெக்னிக்கல் ஆபீசர் (சிவில், எலக்ட்ரிக்கல்), கம்பெனி செகரட்ரி, ஏ.ஜி.எம்., ராஜ்பாஷா அதிகாரி போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
- ஒவ்வொரு பிரிவிலும் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
- ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஏ.ஜி.எம், ராஜ்பாஷா அதிகாரி, கம்பெனி செகரட்ரி போன்ற பணியிடங்களில் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் மற்ற பணியிடங்களில் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது.
- பி.இ., பி.டெக், சட்டம், சி.ஏ. மற்றும் இதர பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு உயர் அதிகாரி பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
- அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.826 கட்டணம் செலுத்தி விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.177 கட்டணம் செலுத்தினால் போது மானது. இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 10-ந் தேதியாகும்.
- இது பற்றிய விரிவான விவரங்களை https://www.psbindia.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
பஞ்சாப் சிந்த் வங்கியில் சிறப்பு அதிகாரி பணி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment