Sunday, October 20, 2019

MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.11.2019.

  • MRPL RECRUITMENT 2019 | MRPL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.11.2019.
  • இணைய முகவரி : https://www.mrpl.co.in/
மத்திய பெட்ரோலியப் பொருட்கள் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்று மங்களூர் ரீபைனரி அண்ட் பெட்ரோகெமிக்கல் லிமிடெட் (எம்.ஆர்.பி.எல்.). தற்போது இந்த நிறுவனத்தில் செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆபீசர், ஜூனியர் கெமிஸ்ட் டிரெயினி, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் டிரெயினி, டிராப்ட்ஸ்மேன் டிரெயினி, அசிஸ்டன்ட் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிபு வெளியாகி உள்ளது. மொத்தம் 233 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதிகபட்சமாக டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 201 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பணிவாரியான காலியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு, கல்வித்தகுதி வேறுபடுகிறது. டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 26 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் பணிக்கு அதிகபட்சம் 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17-8-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.

கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன் போன்ற டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.எஸ்சி. கெமிஸ்ட்ரி, பி.காம், பி.பி.எம்., மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தாங்கள் விரும்பும் பணிக்கான முழுமையான தகுதி விவரங்களை படித்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கவும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியயோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் வருகிற நவம்பர் 9-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை https://www.mrpl.co.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts