MNNIT RECRUITMENT 2019 |
MNNIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : உதவி பேராசிரியர் |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 142 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.
உதவி பேராசிரியர் பணி
மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்று மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் (MNNIT), அலகாபாத்தில் செயல்படும் இந்த கல்வி மையத்தில் தற்போது உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 142 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 73 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 34 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 23 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 12 இடங்களும் உள்ளன, இதில் குறிப்பிட்ட பின்னடைவுப் பணியிடங்களும் உள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
பி.டெக், எம்.சி.ஏ., எம்.டெக் பட்டப் படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பணியிடங்கள் உள்ள பிரிவில் இந்த படிப்புகளை படித்திருக்க வேண்டும். பி.ஏ,., பி.காம், பி.எஸ்சி. பட்டப்படிப்புடன் முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிப்ரவரி 5-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றடையும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
இது பற்றிய விரிவான விவரங்களை http://www.mnnit.ac.in/ என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Home »
NIT JOB
» MNNIT RECRUITMENT 2019 | MNNIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 142 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019
MNNIT RECRUITMENT 2019 | MNNIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர் | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 142 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment