Sunday, February 24, 2019

ECIL RECRUITMENT 2019 | ECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 115 | இணைய முகவரி : www.ecil.co.in

ECIL RECRUITMENT 2019 | ECIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : என்ஜினீயர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 115 | இணைய முகவரி : www.ecil.co.in இந்திய எலக்ட்ரானிக்ஸ் கழக நிறுவனம் சுருக்கமாக ஈசில் (ECIL) எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் பட்டதாரி என்ஜினீயர்களை பயிற்சிப் பணிக்கு அமர்த்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 115 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் 57 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 16 இடங்களும், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 22 இடங்களும், மெக்கானிக்கல் பிரிவில் 15 இடங்களும், சிவில் பிரிவில் 5 இடங்களும் உள்ளன. இதில் சேர விரும்புபவர்கள் 10-2-2019-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. என்ஜினீயரிங், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பயிற்சிப் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். வருகிற மார்ச் 1 மற்றும் 2-ந் தேதிகளில் ஐதராபாத்தில் நேர்காணல் நடக்கிறது. 1-ந்தேதி இ.சி.இ. மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கும், 2-ந் தேதி இ.இ.இ. மற்றும் சிவில், மெக்கானிக்கல் படித்தவர்களுக்கும் நேர்காணல் நடக்கிறது. நேர்காணல் நடைபெறும் முகவரி : CLDC, Nalanda Complex, TIFR Road, ECIL, Hyderabad. நேர்காணலில் பங்கேற்க விரும்புபவர்கள் புகைப் படங்கள் மற்றும் குறிப்பிட்ட அசல் மற்றும் நகல் சான்றுகளை எடுத்துச் செல்ல வேண்டும். இது பற்றிய விவரங்களை www.ecil.co.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts