TNPSC RECRUITMENT 2019 |
TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : அசிஸ்டன்ட் ஜியாலஜிஸ்ட் உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 10 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.03.2019.
இணைய முகவரி : www.tnpsc.gov.in
தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நிலவியல் - சுரங்கத்துறைகளில் அசிஸ்டன்ட் ஜியாலஜிஸ்ட் பணிக்கு ஆட்கள் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலவியல் மற்றும் சுரங்கத்துறையில் 10 இடங்களும், பொதுப் பணித்துறையில் 5 இடங்களும் உள்ளன. இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரத்தை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீடு பெறும் குறிப்பிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.
எம்.எஸ்சி. ஜியாலஜி, அப்ளைடு ஜியாலஜி, எம்.எஸ்சி ஹைட்ரோஜியாலஜி, ஜியோகெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி போன்ற படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 11-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments