- மத்திய நிலக்கரி நிறுவனங்களில் ஒன்று சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட்.
- மத்திய இந்திய பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கங்களை நிர்வகிக்கும் இந்த அமைப்பில் தற்போது டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
- மொத்தம் 750 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரம்: பிட்டர் -250, வெல்டர் -40, எலக்ட்ரீசியன் -360, மெக்கானிக் -45, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் புரோகிராம் அசிஸ்டன்ட் -15, பம்ப் ஆபரேட்டர் கம் மெக்கானிக்- 5, மெஷினிஸ்ட் -20, டர்னர் -15 இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 15-10-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
- ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
- பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- அக்டோபர் 15-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
- இது பற்றிய விரிவான விவரங்களை http://www.centralcoalfields.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
நிலக்கரி நிறுவனத்தில் 750 பயிற்சிப் பணிகள்
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment