- இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (SAIL) எனப்படுகிறது.
- தமிழகத்தின் சேலம் உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன.
- தற்போது பொக்காராவில் செயல்படும் உருக்கு நிறுவனத்தில் டிரெயினி பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு இவர்கள் சேர்க்கப் படுகிறார்கள்.
- மொத்தம் 463 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- பிரிவு வாரியாக ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 95 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர்) 10 இடங்களும், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 121 இடங்களும் உள்ளன. ஆபரேட்டர் கம் டெக்னீசியன் (பாய்லர்) பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- 11-10-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.
- எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு பின்பற்றப்படுகிறது.
- 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின்பு டிரேடு டெஸ்ட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் அட்டன்ட் பணிக்கும், குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆபரேட்டர் கம் டெக்னீசியன், பாய்லர் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.
- விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 11-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும்
- https://www.sail.co.in/ என்ற இணைய தள பக்கத்தைப் பார்க்கலாம்.
டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உருக்கு நிறுவனத்தில் வேலை
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment