- தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி.யின் பல்வேறு கிளைகளில் தற்போது கற்பித்தல் மற்றும் கற்பித்ததால் சாராத பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி வருகிறது. ஜலந்தரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், ஜூனியர் அசிஸ்டன்ட், சீனியர் அசிஸ்டன்ட், ஸ்டெனோகிராபர், சீனியர் ஸ்டெனோகிராபர், ஆபீஸ் அட்டன்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 93 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
- டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள், முதுநிலை பட்டதாரிகளுக்கு பணி யிடங்கள் உள்ளன.
- 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அந்தந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.
- விரிவான விவரங்களை http://www.nitj.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு, அக்டோபர் 2-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- இதேபோல ஜாம்ஷெட்பூரில் செயல்படும் என்.ஐ.டி.யில் சூப்பிரன்டென்ட் என்ஜினீயர், டெபுடி லைபிரரியன், மெடிக்கல் ஆபீசர், பிரின்சிபல் சயின்டிபிக் டெக்னிக்கல் ஆபீசர், சூப்பிரன்டென்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், டெக்னீசியன், சீனியர் டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
- மொத்தம் 73 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ மற்றும் பட்டதாரி என்ஜினீயர்கள் மற்றும் இதர பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு உள்ளது.
- சில பணிகளுக்கு பிளஸ்-2 படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு அக்டோபர் 4-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- பின்னர் நகல் விண்ணப்பத்தை ஒரு வார காலத்திற்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.
- இது பற்றிய விவரங்களை http://www.nitjsr.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
என்.ஐ.டி. கல்வி மையங்களில் வேலை
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment