Sunday, October 20, 2019

INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-10-2019.

  • INDIAN ARMY RECRUITMENT 2019 | INDIAN ARMY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 29-10-2019.
  • இணைய முகவரி : www.joinindianarmy.gov.in
இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கைகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் படைப்பிரிவுகளில் சேர்கக்பபட்டு வருகிறார்கள். தற்போது ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் (மதபோதகர்) பயிற்சி 88,89,90 சேர்க்கையின்படி, மதபோதகர் பணியில் இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. பண்டிட் பிரிவில் 118 பேரும், பண்டிட் (கூர்கா) - 7 பேர், கிரந்தி -9 பேர், மவுலவி - 9, மவுலவி (ஷியா) - 1, புத்த துறவி -4, பத்ரி - 4 பேரும் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 152 பேர் தேர்வு செய்யப்படுகிறார். இதில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை பார்ப்போம்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-10-2020 தேதியில் 25 முதல் 34 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-10-1986 மற்றும் 30-9-1995 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், குறிப்பிட்ட பிரிவு மதபோதகருக்கு அவசியமான கல்வித்தகுதி-சான்றுகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பிட்ட உடல் தகுதியும் அவசியம்.

உடல்தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 160 செ.மீ. உயரமும், 77 செ.மீ. மார்பளவும் பெற்றிருக்க வேண்டும். 5 செ.மீ. விரிவடைய வேண்டும். 1600 மீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் ஓடிக்கடக்கும் உடல்திறன் சோதனை நடத்தப்படும்.

தேர்வு செய்யும் முறை:

சான்றிதழ் சரிபார்த்தல், எழுத்து தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-10-2019-ந் தேதியாகும்.

இது பற்றிய விரிவான விவரங்களை www.joinindianarmy.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts