Ad Code

TN GOVT DISH RECRUITMENT 2019 | தொழிலக பாதுகாப்பு, சுகாதார திட்ட அலுவலகத்தில்  உதவியாளர் பணி. பதவி : உதவியாளர் உள்ளிட்ட பணி . விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.

  • TN GOVT DISH RECRUITMENT 2019 | தொழிலக பாதுகாப்பு, சுகாதார திட்ட அலுவலகத்தில்  உதவியாளர் பணி.
  • பதவி : உதவியாளர்  உள்ளிட்ட பணி .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.10.2019.
  • இணைய முகவரி : https://dish.tn.gov.in
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார திட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 23 அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 8-ம் வகுப்பு தேர்ச்சி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கும் இயக்குநர், கூடுதல் இயக்குநர், துணை இயக்குநர் (கட்டுமான தொழிலாளர்கள்) அலுவலகங்களில் பணியாற்ற 23 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுகின்றனர். குறைந்தபட்ச கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் கல்வித்தகுதி பெற்ற பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியின விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமில்லை. பதிவிறக்கம் செய்யலாம் இந்த ஆட்கள் தேர்வுக்கான அறிவிப்பு இயக்குநரகத்தின் இணைய தளமான ‘ https://dish.tn.gov.in ’-ல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு வரும் அக்.31-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Comments

Ad Code