Sunday, March 15, 2020

DRDO RECRUITMENT 2019 | DRDO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.

  • DRDO RECRUITMENT 2019 | DRDO அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • இணைய முகவரி : www.drdo.gov.in
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு கழக நிறுவனமான டி.ஆர்.டி.ஓ.வின் கீழ், செயல்படும் துணை அமைப்பு அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லேபரேட்டரி. ஐதராபாத்தில் செயல்படும் இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள், டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ், ஏரோ ஸ்பேஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், மெக்கானிக்கல் போன்ற பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் பட்டதாரி பயிற்சி பணிகளுக்கும், டிப்ளமோ படித்தவர்கள் டெக்னீசியன் பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

ஐ.டி.ஐ. படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி தேவையான சான்றுகளுடன் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள், அறிவிப்பில் இருந்து 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.

இது பற்றிய அறிவிப்பு மார்ச் 7-ந் தேதி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களை www.drdo.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts