உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, January 6, 2019

துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை | நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. நாள் : ஜனவரி 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை

துணை ராணுவத்தில் மருத்துவ அதிகாரி வேலை |துணை ராணுவ படைகளில் ஒன்று பி.எஸ்.எப். தற்போது இந்த படைப்பிரிவில் சிறப்பு மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவர் மற்றும் பொது மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 79 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சிறப்பு மருத்துவர் பணிக்கு 18 இடங்களும், மருத்துவ அதிகாரி (பொது பணி) 59 இடங்களும், பல் மருத்துவர் பணிக்கு 2 இடங்களும் உள்ளன. எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் பொது மருத்துவ பணிக்கு விண்ணப்பிக்கலாம், முதுநிலை மருத்துவ படிப்புடன், குறிப்பிட்ட பிரிவில் டிப்ளமோ படித்தவர்கள் சிறப்பு மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். பி.டி.எஸ். படித்தவர்கள் பல் மருத்துவர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 67 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜனவரி 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை இணையதளத்தில் படித்து அறிந்து கொண்டு, தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment