தமிழகத்தில், 139 குரூப்-1 பணிகள்
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 139 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பணி வாரியான காலியிட விவரம் : உதவி கலெக்டர் -27, டி.எஸ்.பி.-56, உதவி கமிஷனர் -11, துணைப்பதிவாளர் (கூட்டுறவுத்துறை)- 13, மாவட்ட பதிவாளர்-7, உதவி இயக்குனர் (கிராமப்புற வளர்ச்சி) - 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி - 8, மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி அதிகாரி -2.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பை படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந்தேதியில் 21 வயது பூர்த்தி அடைபவராகவும், 37 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உதவி கமிஷனர் பணிக்கு மட்டும் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு தமிழக அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.450 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பித்தவர்கள் விண்ணப்ப பதிவு கட்டணமான ரூ.150 செலுத்த வேண்டியதில்லை. சில பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது.
இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஜனவரி 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இந்த பணிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு வருகிற மார்ச் 3-ந் தேதி நடக்கிறது. முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும் தேர்வுநாள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnspc.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment