உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, January 20, 2019

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 327 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.

UPSC RECRUITMENT 2019 | UPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி பேராசிரியர்| மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 327 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019. மத்திய அரசு துறைகளில் உதவி பேராசிாியர் மற்றும் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 358 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. எனப்படுகிறது. மத்திய அரசு துறைகளில் ஏற்படும் உயர் பதவிகளை இந்த அமைப்பு தேர்வு நடத்தி தகுதியானவர்களை பணியமர்த்துகிறது. தற்போது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மொத்தம் 358 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் மருத்துவ அதிகாரி (பொது) பணிக்கு மட்டும் 327 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ அதிகாரி (ஜெனரல் டியூட்டி) பணிக்கு 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். உதவி பேராசிரியர் மற்றும் பிற பணிகளில் அதிகபட்சம் 55 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் மருத்துவ அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.பி.எஸ். படிப்புடன், குறிப்பிட்ட மருத்துவ பிரிவுகளில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இந்த கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜனவரி 31-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment