CDAC RECRUITMENT 2019 |
CDAC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : உள்ளிட்ட பணி |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 76 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2019.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ், அதிநவீன கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் (சி.டி.ஏ.சி.) செயல்படுகிறது. தற்போது இந்த நிறு வனத்தின் நொய்டா கிளையில் திட்ட மேலாளர், பொறியாளர், அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு 76 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலாளர், அதிகாரி பணிகளுக்கு 50 வயதுடையவர்களும், திட்டப் பொறியாளர் பணிக்கு 37 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக் படித்தவர்கள், எம்.சி.ஏ., எம்.டெக் மற்றும் சட்டம், சி.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 25-2-2019-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
திட்ட மேலாளர் மற்றும் திட்ட அதிகாரி பணி களுக்கு மார்ச் 9-ந் தேதி நேர்காணல் நடக்கிறது. திட்ட பொறியாளர் பணிக்கு மார்ச் 9-ந் தேதி ஆன்லைன் தேர்வும், மார்ச் 10-ந் தேதி நேர்காணலும் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.cdac.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.
0 Comments