SAIL RECRUITMENT 2019 |
SAIL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி :டெக்னீசியன் டிரெயினி|
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 380 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 16-2-2019.
உருக்கு ஆணைய நிறுவனத்தில் 380 பணியிடங்கள்
உருக்கு ஆணைய நிறுவன கிளைகளில் 380 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செய்ல் (SAIL) என அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் சேலம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் கிளை நிறுவனங்கள் உள்ளன. தற்போது பொக்காரோவில் உள்ள இரும்பு எக்கு தொழிற்சாலையிலும், பிலாயில் உள்ள இரும்பு எக்கு ஆலையிலும் பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாய் கிளையில் என்ஜினீயர், டிரெயினி உள்ளிட்ட பணி களுக்கு 153 பேரும், ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ கிளையில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெயினி, அட்டன்ட் கம் டெக்னீசியன் டிரெயினி போன்ற பணிகளுக்கு 275 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு 95 இடங்களும், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பாய்லர் பணிக்கு 10 பேரும், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 121 பேரும், அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கு 49 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பொக்காரோ பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்...
வயது வரம்பு
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு பணிகள் உள்ளன. ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. 18-2-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.
கல்வித்தகுதி
மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவுகளில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிகளுக்கும், மெட்ரிக் தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்தவர்கள் அட்டன்ட் கம் டெக்னீசியன் பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். பாய்லர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.150 மட்டும் செலுத்தினால் போதுமானது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.sail.co.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
பிலாய் 153 பணிகள்
பிலாய் கிளையில் பயர் என்ஜினீயர், ஆபரேட்டர் கம் டெக்னீசியன், ஜூனியர் ஸ்டாப் நர்ஸ், பார்மசிஸ்ட், ஜூனியர் மெடிக்கல் டெக்னாலஜிஸ்ட் உள்ளிட்ட பணிகளுக்கு 153 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். இதில் ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பணிக்கு மட்டும் 116 இடங்கள் உள்ளன.
டிப்ளமோ என்ஜினீயரிங், நர்சிங் மற்றும், பார்மசி டிப்ளமோ படிப்புகள், ஐ.டி.ஐ. படித்தவர்கள், பயர் என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வும் அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.
இந்த பணிகளுக்கு 16-2-2019-ந் தேதிக் குள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
இது பற்றிய விவரங்களை https://sailcareers.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
0 Comments