மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17 மற்றும் 18-ந்தேதிகளில் நடைபெற உள்ளது. இதனால் தகுதிவாய்ந்த மின்கம்பி உதவியாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் மின் வயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருக்கவேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
இந்த தேர்வுக்குரிய விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க குறிப்பேட்டினை தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து ரூ.10 ரொக்கமாக செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனுப்புவதற்கு வருகிற 26-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
மேற்கண்ட தகவல் சென்னை மாவட்ட கலெக்டர் ஆர்.சீத்தாலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Home »
» மின்கம்பி உதவியாளர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
No comments:
Post a Comment