- MKU RECRUITMENT 2019 | MADURAI KAMARAJ UNIVERSITY அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : கௌரவ விரிவுரையாளர் .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 92 .
- நேர்காணல் நாள் : 16-7-2019-ந் தேதி முதல் 18-7-2019 வரை.
- இணைய முகவரி : www.mkuniversity.ac.in
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளர் (Guest fculty) பணிக்கு 92 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது ஒப்பந்த அடிப்படையிலான பணிகளாகும். தமிழ், இயற்பியல், ஆங்கிலம், கணிதம், பொருளாதாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல், பி.பி.ஏ., எம்.பி.ஏ., டூரிஸம் மேனேஜ்மென்ட், ஓட்டல் மேனேஜ்மென்ட், பிசிகல் எஜூகேசன் போன்ற பாடப்பிரிவில் பணிகள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பணியிடங்கள் உள்ள பிரிவில் முதுநிலை படிப்புடன், நெட், செட் தேர்வு எழுதியவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம். 16-7-2019-ந் தேதி முதல் 18-7-2019 வரை 3 நாட்கள் நேர்காணல் நடக்கிறது. எந்த பாடங்களுக்கு எந்த நாளில், எந்த நேரத்தில் நேர்காணலில் ஆஜராக வேண்டும் என்பதை அறிந்து கொண்டு நேரில் செல்லவும். விரிவான விவரங்களை www.mkuniversity.ac.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment