- NIT RECRUITMENT 2020 | NIT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 06.04.2020.
இது பற்றிய விவரம் வருமாறு:-
தேசிய தொழில்நுட்ப கல்வி மையம் சுருக்கமாக என்.ஐ.டி. எனப்படுகிறது. தற்போது இந்த கல்வி மையத்தின் பல்வேறு கிளைகளில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத அலுவலக பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்ரீநகரில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 76 இடங்களும், சூரத் என்.ஐ.டி.யில் 73 இடங்களும், அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 58 இடங்களும், மேகலாயாவில் உள்ள என்.ஐ.டி. கிளையில் 30 இடங்களும் நிரப்பப்படுகிறது.
ஸ்ரீநகர்
என்.ஐ.டி.யின் ஸ்ரீநகர் கிளையில் உதவி பேராசிரியர், பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 76 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கெமிக்கல் என்ஜினீயரிங், சிவில், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், இன்பர்மேசன் டெக்னாலஜி, மெக்கானிகல், மெட்டலர்ஜிக்கல் அண்ட் மெட்டீரியல்ஸ், கெமிஸ்ட்ரி, ஹியூமனிட்டிஸ் அண்ட் சோசியல் சயின்ஸ், மேத்தமேடிக்ஸ் போன்ற துறைகளில் பணியிடங்கள் உள்ளன.
உதவி பேராசிரியர் பணிக்கு 59 இடங்களும், இணை பேராசிரியர் போன்ற பணிகளுக்கு 13 இடங்கள், பேராசிரியர் பணிக்கு 4 இடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடத்துறையிலும் உள்ள பணியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
மேற்கண்ட துறை சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் www.nitsri.ac.in என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்து அறிந்து கொண்டு இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.
சூரத்
சர்தார் வல்லபாய் என்.ஐ.டி. சூரத்தில் செயல்படுகிறது. இங்கு உதவி பேராசிரியர் பணிக்கு 73 இடங்கள் நிரப்பப்படுகிறது. பொதுப் பிரிவினருக்கு 13 இடங்களும், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு 17 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 14 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 8 இடங்களும் உள்ளன.
மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில், அப்ளைடு மேத்தமேடிக்ஸ, அப்ளைடு பிசிக்ஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி போன்ற பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.
இது சார்ந்த பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் மார்ச் 2-ந் தேதியாகும்.
இது பற்றிய விவரங்களை www.svnit.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
அகர்தலா
அகர்தலாவில் உள்ள என்.ஐ.டி.யில் உதவி பேராசிரியர் (கிரேடு-1, கிரேடு-2) பணிக்கு 58 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயோ என்ஜினீயரிங், கணிதவியல், இயற்பியல், ஹியூமனிட்டிஸ் அண்ட் சோசியல் சயின்ஸ் உள்பட 14 பாடத்துறைகளில் பணியிடங்கள் உள்ளன.
இவை சார்ந்த முதுநிலை படிப்புகள், முனைவர் படிப்புகள் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் http://www.nita.ac.in/ என்ற இணைய தளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 25-ந் தேதி (நாளை) கடைசி நாளாகும்.
மேகாலயா
மேகாலயா என்.ஐ.டி. கிளையில் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், டெக்னீசியன், லேபரேட்டரி அட்டன்ட் போன்ற பணிகளுக்கு 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஐ.டி.ஐ, பிளஸ்-2, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் இளநிலை, முதுநிலை பட்டதாரிகளுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6-ந் தேதி கடைசி நாளாகும்.
இது பற்றிய விவரங்களை http://nitmeghalaya.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment