Indian Coast Guard RECRUITMENT 2019 |
Indian Coast Guard அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : நேவிக் (ஜெனரல் டியூட்டி) |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : .... |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-1-2019
பிளஸ்-2 படித்தவர்கள் கடலோர காவல்படையில் சேர்ப்பு.கடலோர காவல் படையில் பிளஸ்-2 படித்தவர்கள் நேவிக் பணியில் சேர்க்கப்படுகிறார்கள்.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை, ஆயுதப்படைப் பிரிவின் ஒரு அங்கமாகும். கடற்கரை மற்றும் கடலோர பாதுகாப்பு பணிகளை இந்த படைப்பிரிவு கவனித்து வருகிறது. தற்போது இந்த படைப்பிரிவில் நேவிக் (ஜெனரல் டியூட்டி)-02/2019 பயிற்சி சேர்க்கையில் பிளஸ்-2 படித்தவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சியுடன் கூடிய பணியில் சேர விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய இதர தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 22 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 1-8-1997 மற்றும் 31-7-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களே. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித் தகுதி:
பிளஸ்-2 படிப்பை 10+2 முறையில் படித்து 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் கணிதம், இயற்பியல் பாடங்களிலாவது 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பெண் சலுகை உண்டு.
உடல்தகுதி:
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்திற்கேற்ற எடை பரிசோதிக்கப்படும். பார்வைத்திறன் நல்ல நிலையில் 6/6 மற்றும் பாதிப்படைந்த நிலையில் 6/9 என்ற அளவுக்கு உட்பட்டிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் தேர்வு முறைகளுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்து தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ தேர்வு ஆகியவற்றுக்கு உட்படுத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பயன்பாட்டில் உள்ள இ-மெயில் முகவரி மற்றும் செல்போன் எண் கொடுப்பது அவசியம். விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின் 3 கணினிப் பிரதிகள் எடுத்து அனைத்திலும் புகைப்படம் ஒட்டி தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து அரசு அதிகாரியிடம் சான்றொப்பம் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வுக்கு அழைக்கும்போது அதை எடுத்துச் செல்ல வேண்டும்.
முக்கியத் தேதி:
இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் : 31-1-2019. விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், மேலும் விரிவான விவரங்களை அறிந்து கொள்ளவும் http://joinindiancoastguard.gov.in/ என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

No comments:
Post a Comment