ESI RECRUITMENT 2019 |
ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு |
பதவி : சிறப்பு மருத்துவ அதிகாரி (கிரேடு-2) |
மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தமிழகத்தில் 9 |
விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-1-2019
இ.எஸ்.ஐ. நிறுவனத்தில் சிறப்பு மருத்துவ அதிகாரி பணி
தொழிலாளர்கள் நல காப்பீட்டு கழக நிறுவனத்தின் கீழ் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. தற்போது டெல்லியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் தலைமையகத்தில் இருந்து நாடு முழுவதும் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ மனைகளில் சிறப்பு மருத்துவ அதிகாரி (கிரேடு-2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 329 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் தமிழகத்தில் 9 பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2019-ந் தேதியில் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
பணியிடங்கள் உள்ள மருத்துவ பிரிவுகளில் முதுநிலை படிப்பு படித்து, குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கார்டியாலஜி, காஸ்ட்ரோஎன்ட் ராலஜி, நியூராலஜி, ஆங்காலஜி, யூராலஜி, அனஸ்தீசியா, பயோகெமிஸ்ட்ரி, டெர்மாலஜி, ஜெனரல் மெடிசின், ஜெனரல் சர்ஜரி, பேதாலஜி, ரேடியோ டயக்னாசிஸ், சைக்கியாட்ரி உள்ளிட்ட ஏராளமான பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதாரர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 24-1-2019-ந் தேதிக்குள் அந்தந்த மாநில மண்டல இ.எஸ்.ஐ. இயக்குனர் அலுவலக முகவரிக்கு சென்றடைய வேண்டும். தமிழக விண்ணப்பதாரர்கள் Regional Director, ESI Corporation, Panchdeep Bhawan, 143, Sterling Road, Chennai-600034. Tamil Nadu என்ற முகவரிக்கு விண்ணப்பத்தை தேவையான சான்றுகளுடன் அனுப்பலாம். இது பற்றிய விரிவான விவரங்களை www.esic.nic.in என்ற முகவரியில் பார்க்கலாம்.
Home »
DOCTOR JOB
» ESI RECRUITMENT 2019 | ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ அதிகாரி (கிரேடு-2) | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தமிழகத்தில் 9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-1-2019
ESI RECRUITMENT 2019 | ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ அதிகாரி (கிரேடு-2) | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : தமிழகத்தில் 9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 24-1-2019
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment