- ICF RECRUITMENT 2019 | ICF அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு
- பதவி : எலக்ட்ரீசியன், பிட்டர் உள்ளிட்ட பணி
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 992
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 24.06.2019
- இணைய முகவரி : www.icf.indianrailways.gov.in
ரெயில்பெட்டி தொழிற்சாலையில் 992 பயிற்சிப் பணிகள் ஐ.டி.ஐ. படிப்பு தகுதி ரெயில்பெட்டி தொழிற்சாலையில் பயிற்சிப் பணியிடங்களுக்கு 992 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழகத்தில் சென்னையில் உள்ள பெரம்பூரில் ரெயில்பெட்டி தொழிற்சாலை இயங்குகிறது. தற்போது இந்த தொழிற்சாலையில் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 992 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக கார்பெண்டர் பிரிவில் 80 இடங்களும், எலக்ட்ரீசியன் பிரிவில் 200 இடங்களும், பிட்டர் பிரிவில் 260 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 80 இடங்களும், பெயிண்டர் பிரிவில் 80 இடங்களும், வெல்டர் பிரிவில் 290 இடங்களும், பி.ஏ.எஸ்.ஏ.ஏ. பணிக்கு 2 இடங்களும் உள்ளன. இதில் சமீபத்தில் படித்து முடித்த விண்ணப்பதாரர்களுக்கு (பிரஸ்ஸர்) கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை அறிவோம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-10-2019-ந் தேதியில் 15 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். கல்வித்தகுதி: பணியிடங்கள் உள்ள பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு அறிவியல் பிரிவை தேர்வு செய்து படித்தவர்கள் சமீபத்தில் படித்து முடித்த வர்களுக்கான (பிரஸ்ஸர்) பயிற்சிப் பணியில் சேரலாம். டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. தேர்வு செய்யும் முறை: மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். உடல்திறன் சோதிக்கப்படும். விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். வருகிற ஜூன் 24-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான சான்றுகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.icf.indianrailways.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment