- AIIMS RECRUITMENT 2020 | அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.04.2020.
இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம் சுருக்கமாக எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்படும் இந்த மருத்துவ மையத்தில் மருத்துவமனை- கல்லூரி செயல்படுகிறது.
தற்போது ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் பேராசிரியர், கூடுதல் பேராசிரியர், உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 164 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பயோகெமிஸ்ட்ரி, பிஸியாலஜி, அனட்டாமி, பார்மகாலஜி, கம்யூனிட்டி மெட், பார்ம் மெட், பாரன்சிக் மெட், டாக்சிகாலஜி, மைக்ரோ பயாலஜி, சைக்கியாட்ரி, பேதாலஜி, அனஸ்திசியாலஜி, ஜென் மெடிசின், பீடியாட்ரிக்ஸ், ஆர்தோபெடிக்ஸ், இ.என்.டி., ஜெனரல் சர்ஜரி உள்ளிட்ட மருத்துவ பிரிவில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணியிடங்கள் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்புகள், முனைவர் ஆராய்ச்சி படிப்புகள் படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அது பற்றிய விவரங்களையும் முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 7-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.aiimsrishikesh.edu.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment