- IDBI RECRUITMENT 2019 | IDBI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
- பதவி : உள்ளிட்ட பணி .
- மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 600 .
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 3-7-2019.
- தேர்வு நடைபெற உள்ள நாள் : 21-7-2019 .
- இணைய முகவரி : www.idbibank.in
பிரபல வங்கியில் உதவி மேலாளர் பணிக்கு 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய தொழிற்சாலைகள் வளர்ச்சி வங்கி சுருக்கமாக ஐ.டி.பி.ஐ. (IDBI) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, மணிப்பால் வங்கிப் பணிகள் கல்லூரியில் பயிற்சி படிப்பில் சேர்க்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் பணி நியமனம் பெறலாம். அத்துடன் பயிற்சி நிறைவில் அவர்கள் வங்கி நிதிப் பணிகளுக்கான டிப்ளமோ படிப்பு படித்ததற்கான சான்றிதழும் வழங்கப்படும்.
பயிற்சியுடன் கூடிய இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரம் வருமாறு...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-6-2019-ந் தேதியில் 21 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கட்டணம்
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.150 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். மற்றவர்கள் ரூ.700 கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் 3-7-2019-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 21-7-2019-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.idbibank.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment