- மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் பணிகளுக்கான தேர்வு 495 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது
- மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் பணியிடங்களை நிரப்பும் ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வை யூ.பி.எஸ்.சி. அமைப்பு அறிவித்து உள்ளது.
- மொத்தம் 495 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது.
- மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் பல்வேறு அதிகாரி பணியிடங்களையும், இந்த அமைப்பு தேர்வு நடத்தி தகுதியானவர்கள் மூலம் நிரப்பி வருகிறது.
- தற்போது அரசு துறைகளில் ஏற்படும் என்ஜீனியரிங் சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த எழுத்துத் தேர்வை அறிவித்து உள்ளது.
- ‘என்ஜினீயரிங் சர்வீசஸ் எக்ஸாம்-2020’ எனப்படும் இந்த தேர்வின் மூலம், மொத்தம் 495 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் பிரிவுகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- ரெயில்வே துறை, மத்திய என்ஜினீயரிங் சர்வீஸ், மத்திய சாலைப்பணிகள், சிவில் என்ஜினீயரிங் பணிகள் பிரிவு, சர்வே ஆப் இந்தியா, பார்டர் ரோடு என்ஜினீயரிங் சர்வீஸ், இந்தியன் டிபென்ஸ் சர்வீஸ் என்ஜினீயர், சர்வேயர் கேடர், மத்திய நீர் பொறியியல் பணிகள், திறன் மேம்பாட்டு பணிகள் , டெலிகாம் பிரிவு உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு:- வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-1-2020 தேதியில் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள், 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 2-1-1989-ந்தேதி மற்றும் 1-1-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
- கல்வித்தகுதி: பி.இ., பி.டெக் பட்டப்படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள், எம்.எஸ்.சி. அறிவியல் படிப்புகளில் என்ஜினீயரிங் சார்ந்த அறிவியல் படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
- உடல்தகுதி: குறிப்பிட்ட துறை பணிகளில் சேர்வதற்கு உடல்தகுதி அவசியம். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல் அளவுத் தேர்வு மூலம் இவை சோதிக்கப்படும்.
- கட்டணம் : பெண் விண்ணப்பதாரர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மற்றவர்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க முடியும்.
- விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
- முன்னதாக புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளவும். இறுதியாக பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்வதுடன், தேவையான சான்றுகளை நகல் எடுத்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.
- இணையதளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-10-2019-ந் தேதியாகும் , இதற்கான முதல்நிலைத் தேர்வு வருகிற 2020 ஜனவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது.
- விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
மத்திய அரசு துறைகளில் என்ஜினீயரிங் பணி
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment