ஐ.பீ.பி.எஸ். நடத்தும் வங்கி கிளார்க் பணிக்கான எழுத்து தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருச்செந்தூர் சிவந்தி அகாடமி பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது.
கிளார்க் பணி
இந்திய வங்கிகள் சங்கம் (ஐ.பீ.பி.எஸ்.) நடத்தும் பொதுத்துறை வங்கி கிளார்க் பணிக்கான எழுத்துத்தேர்வு டிசம்பர் மாதம் 7, 8, 14, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 12 ஆயிரத்து 75 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த தேர்வுக்கு www.ibps.in என்ற இணையதளத்தின் வழியாக அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று 20 வயது முதல் 28 வயதுக்கு மிகாதவர்கள் இத்தேர்வை எழுதலாம். இந்த தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் நடைபெற உள்ளது.
பயிற்சி கட்டணம்
இதற்கான பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரம் ஆகும். பயிற்சி வகுப்பு நடைபெறும் போது எக்காரணம் கொண்டும் விடுப்பு எடுக்க அனுமதியில்லை.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் ஆண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி ஆண்கள் விடுதியிலும், பெண்கள் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பெண்கள் விடுதியிலும் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி படிக்க விரும்புபவர்கள் விடுதிக்கான கட்டணம் ரூ.3 ஆயிரத்தை பயிற்சி வகுப்பின் முதல் நாள் செலுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்பில் சேர...
பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள், ஒரு வெள்ளை தாளில் போட்டோ ஒட்டி பெயர், பின்கோடுடன் முகவரி, தொலைபேசி எண், இ-மெயில் முகவரி மற்றும் விடுதி விருப்பம் ஆகியவற்றை எழுதி அத்துடன் ரூ.4 ஆயிரத்துக்கான டிமான்ட் டிராப்ட் (கனரா வங்கி, ஐ.ஓ.பி. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி) சிவந்தி அகாடமி, திருச்செந்தூர் என்ற பெயரில் எடுத்து சிவந்தி அகாடமி, தூத்துக்குடி ரோடு, திருச்செந்தூர்-628216, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 5-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பயிற்சிக்கான கட்டணம், விடுதிக்கான கட்டணம் ஆகியவை எக்காரணம் கொண்டும் திருப்பி தரப்படமாட்டாது. மேலும் தகவலுக்கு 04639-242998, 9442055243, 8682985148 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும்.
இந்த தகவலை சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் பி.முத்தையாராஜ் தெரிவித்துள்ளார்.
Monday, September 30, 2019
திருச்செந்தூர் சிவந்தி அகாடமியில் வங்கி கிளார்க் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் நடக்கிறது
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
ESI RECRUITMENT 2019 | ESI அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : SPECIALISTS GRADE II | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 72+257 | ...
-
ESIC RECRUITMENT 2019 | ESIC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : ஸ்டெனோ மற்றும் மேல்நிலை கிளார்க் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்...
-
INDIAN COAST GUARD RECRUITMENT 2019 | INDIAN COAST GUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08-11-2019. இண...
-
தமிழக மின்சார வாரியத்தின் கீழ் செயல்படும் மின்பகிர்மான கழகத்தில் 2900 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- த...
-
TN CENTRAL COOP BANK RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர் . மொத்த காலிப்பணிய...
-
இந்தி, ஆங்கில மொழிகளில் நடத் தப்பட்ட அஞ்சல் துறை பணி களுக்கான தேர்வு ரத்து செய்யப் படும் என்றும் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மீண்டு...
-
PDILIN RECRUITMENT 2019 | PDILIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : ஜூனியர் கன்ஸ்ட்ரக்சன் சூப்பிரவைசர், என்ஜினீயர் உள்ளிட்ட பண...
-
TNPSC RECRUITMENT 2019 | TNPSC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : Senior Technical Assistant, Junior Technical Assistant | ...
No comments:
Post a Comment