- தமிழகத்தில் காலியாக உள்ள 1,234 கிராம செவி லியர் பணியிடங்களுக் குத் தகுதியான பெண் கள், சான்றிதழ்களுடன் அக்.4-ம் தேதிக்குள் சாந் தோமில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
- இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதா லட்சுமி வெளியிட்ட செய் திக்குறிப்பு: தமிழகத்தில் 1,234 கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பெண் பதிவு தாரர்கள், மாநில அள விலான உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவல கத்தின் மூலம் பரிந் துரைக்கப்பட உள்ளனர்.
- எனவே, 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், பொது சுகா தாரம் மற்றும் நோய்த்தடுப்பு இயக்குநரால் வழங் கப்பட்ட 18 மாத பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற வர்கள், அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் 2 ஆண்டு களுக்கான ‘AUXILIARY NURSE MIDWIFE’ அல்லது பல்நோக்கு சுகாதார பணி யாளருக்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும், தமிழ்நாடு செவி லியர் மற்றும் பேறுகால மருத்துவப் பணிகளுக்கான கவுன்சிலில் கண்டிப்பாக பதிவு செய்திருத்தல் வேண்டும்.
- மேலும், கிராம சுகாதார செவிலியருக்கான பயிற்சியை அரசு பயிற்சி நிறுவனங்கள் அல்லது இந்தியன் நர்சிங் கவுன் சிலால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங் களிலோ பயின்று தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.
- கடந்த ஜூலை 1-ம் தேதிப்படி முற்பட்ட வகுப் பினர் தவிர அனைத்து இதர வகுப்பினரும் 57 வயதுக்குள் இருக்க வேண் டும். முற்பட்ட வகுப்பினர் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கல்வித் தகுதி, வயது வரம்புக்கு உட்பட்டு பதிவு செய்த தகுதியான பதிவு தாரர்கள், அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், முன்னுரிமை பதிவு தொடர்பான சான்று, ஜாதிச் சான்று, இணையதள வழி பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன், சாந்தோமில் உள்ள மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகத்தில், அக்டோபர் 4-ம் தேதி வரை மாலை 3 மணிக்குள் ஆஜராக வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
1,234 கிராம சுகாதார செவிலியர் பணி நியமனம்
https://www.kalvisolai.com/
No comments:
Post a Comment