உங்க கருத்தை பதிவு செய்யுங்கள்

Follow by Email

Sunday, January 20, 2019

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019.

BHEL RECRUITMENT 2019 | BHEL அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 573 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.01.2019. மத்திய மின்சார நிறுவனம் மற்றும் ரசாயன நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு ஏராளமான பயிற்சிப்பணி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பாரத மிகுமின் நிறுவனம் சுருக்கமாக ‘பெல்’ என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் திருச்சி உள்பட நாடுமுழுவதும் இந்த நிறுவனத்தின் கிளைகள் செயல்படுகின்றன. தற்போது இதன் கிளை நிறுவனங்களில் 2019-ம் ஆண்டுக்கான அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கான ஆட்சேர்க்கை நடக்கிறது. போபால் கிளையில் 573 பேரை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 287 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 86 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 86 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 114 இடங்களும் உள்ளன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் குறிப்பிட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இந்த பயிற்சிப் பணியில் சேரலாம். 31-3-2019-ந் தேதியில் 14 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டு இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதலில் https://ncvtmis.gov.in என்ற இணையதளம் சென்று தங்கள் பெயரை பதிவு செய்த பின்னர், அணுசக்தி நிறுவனத்தின் இணைய தளமான www.bhelbpl.co.in சென்று விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஜனவரி 31-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப்பிரதி எடுத்து பிப்ரவரி 10-ந் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரியை சென்றைடயும்படி அனுப்ப வேண்டும். இது பற்றிய விவரத்தை மேற்குறிப்பிட்டுள்ள அணுசக்தி மைய இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment