Ad Code

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் (கிரேடு-ஏ) உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 079 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-5-2019.

NABARD RECRUITMENT 2019 | NABARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : உதவி மேலாளர் (கிரேடு-ஏ) உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 079 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 26-5-2019. இணைய முகவரி : www.nabard.org
நபார்டு வங்கியில் அதிகாரி பணி விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான தேசிய வங்கி சுருக்கமாக நபார்டு (NABARD) என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த வங்கியில் உதவி மேலாளர் (கிரேடு-ஏ) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பல்வேறு பிரிவுகளில் அதிகாரி பணிகள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-5-2019-ந் தேதியில் 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். ஏதேனும் ஒரு பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு படித்து, முதுநிலை படிப்பு படித்தவர்கள், முதுநிலை மேனேஜ்மென்ட் டிப்ளமோ படிப்பு அல்லது எம்.பி.ஏ., பிஎச்.டி. படித்தவர்கள் இந்த பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ரூ.800 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு கட்டணமாக ரூ.150 மட்டும் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது. இணையதளம் வழியாக கட்டணம் மற்றும் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 26-5-2019-ந் தேதியாகும். இதற்கான முதல்நிலைத் தேர்வு ஜூன் மாதம் 15,16-ந் தேதிகளில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட தேர்வு பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவை பற்றிய விரிவான விவரங்களை www.nabard.org/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

Post a Comment

0 Comments

Comments

Ad Code