Sunday, March 22, 2020

TN CENTRAL COOP BANK RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.

  • TN CENTRAL COOP BANK  RECRUITMENT 2019 | TN CENTRAL COOP BANK அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.
  • பதவி : உதவியாளர் .
  • மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1383 .
  • விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.04.2020.
  • இணைய முகவரி : www.slmdrb.in
தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 1383 உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. கடந்த வாரம் சில மாவட்ட பணியிடங்கள் பற்றி பார்த்தோம். இங்கு மேலும் சில மாவட்டங்களில் வாரியான பணியிட விவரம்:

சேலம் - 166, தர்மபுரி - 119, திண்டுக்கல்-111, கன்னியாகுமரி- 40, அரியலூர் -25, பெரம்பலூர்- 28, சிவகங்கை -37, தேனி -20, மதுரை -136, தூத்துக்குடி -96, திருச்சி -181, திருநெல்வேலி - 70, திருவண்ணாமலை -127, விழுப்புரம் -108, விருதுநகர் -119. மொத்தம் -1383 பணியிடங்கள் உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கிகள், கிளைகள் வாரியான காலியிட விவரங்கள், இட ஒதுக்கீடு அடைப்படையிலான காலியிட விவரங்களை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1-1-2019-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், பொதுப் பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை.

கல்வித் தகுதி

பட்டப்படிப்பு படித்தவர்கள், கூட்டுறவு மேலாண்மை பயிற்சி பெற்றவர்கள், ராணுவத்தில் பணி செய்து, பட்டப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் :

விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்துப் பிரிவையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைத்துப் பிரிவையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு இந்த கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அப்போது புகைப்படம், கையொப்பம், சாதிச் சான்று, கூட்டுறவு பட்டய பயிற்சி சான்று, பட்டப்படிப்பு சான்று, கட்டண ரசீது உள்ளிட்ட தேவையான அனைத்து சான்றுகளையும் குறிப்பிட்ட அளவுக்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஒருசில மாவட்ட கூட்டுறவு வங்கி பணிகளுக்கு ஏற்கனவே கடந்த 2019, ஆகஸ்டு, செப்டம்பர் காலங்களில் விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

சேலம் மாவட்ட பணிகளுக்கு மார்ச் 31-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.slmdrb.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இது போல ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு பணிக்கும் விண்ணப்பிக்க கடைசி தேதி மாறுபடுகிறது. அதிகபட்சமாக மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஏப்ரல் 17-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.‘

இதுபற்றிய விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கி இணையதள பக்கத்தில் அறிந்து கொண்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அந்தந்த மாவட்டத்திற்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட கூட்டுறவு வங்கியின் இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Posts